Tuesday 13 May 2014

சீவலப்பேரி ஸ்ரீ சுடலை மாடசாமி வரலாறு

திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டையில் இருந்து பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ளது சீவலப்பேரி எனும் கிராமம். அங்குதான் சுடலை மாடனின் ஆலயமும் உள்ளது. சுப்பிரமணியர் (முருகன்) பழநிக்குச் சென்று விட்டதும் பார்வதிக்கு இன்னொரு குழந்தை வேண்டும் என்ற ஆசை தோன்றியது. அவள் தனது கணவர் சிவபெருமானிடம் அதை பற்றிக் கூற அவரும் அவளை மரகதக் கல்லினால் ஆனா விளக்கில் தீபம் ஏற்றுமாறும் அது எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்றார். அது எரிந்து விளக்கு மங்கத் துவங்க அதன் திரியை சிவ பெருமான் பெரியதாக்கிக் கொண்டே இருந்தார். அப்போது அது பார்வதியின் தொடையில் விழுந்து அங்கு அவள் சதை பெரியதாயிட்று. ஆகவே பிரும்மாவை அழைத்து அதற்கு குழந்தை உரு கொடுக்க அதுவும் குழந்தையாக மாறி சுடலை என்ற பெயர் பெற்றது. அது பெரியவனானதும் பசி பசி என எப்போதும் பசியால் துடித்து ஸ்மசானத்தில் இருந்த உடல்களைத் தின்னத் துவங்கியது. ஒரு நாள் அதன் உடலில் பிண வாசனை அடிப்பதைக் கண்ட பார்வதி அதைப் பற்றி சிவனிடம் கூற கோபமுற்ற அவர் அதை கைலாசத்தில் இருந்து அனுப்பிவிடுமாறுக் கூறினார். ஆகவே பார்வதி அதனுடன் இருபத்தி ஒரு பிடி சமைத்த உணவை தந்து வனப் பேச்சியை அழைத்து அதை அங்கிருந்து அழைத்துப் போய் விடுமாறு கூறினாள்.
அந்தக் குழந்தையும் தாமிரபரணியின் அருகில் இருந்த சீவலப்பேரியை அடைந்தது. அங்கு சென்றதும் அந்த குழந்தைக்கு பசி எடுக்க அங்கு வந்த மசானம் என்ற ஆட்டு இடையனிடம் அவன் கொண்டு வந்த ஆட்டின் பாலைக் கறந்து தருமாறு கேட்க மசானமோ அது பால் தர முடியாத மலடி ஆடு என்றான். சுடலை விடவில்லை அதன் பாலைக் கரக்குமாறு கூற மசானமும் பாலைக் கறக்கத் துவங்க மலட்டு ஆடு நிறைய பாலை தந்ததும் அதை அந்த குழந்தை குடித்தது. மசானத்தின் நாக்கில் சுடலை மாறன் ஒரு யந்திரம் வரைந்தார். மேலும் அது முதல் மசானம் எப்போது அழைத்தாலும் தான் வந்து அவருக்கு உதவுவதாகக் கூறி அனுப்பினார்.
மசானமும் சிவகிரிக்குச் சென்று அங்கு யோகக் கலையையும் ஆன்மீகத்தையும் கற்றறிந்து வந்தார். சுடலை மாடன் இருந்த இடத்தில் சிவ லிங்கமும் இருந்ததைக் கண்டார். ஆகவே மக்கள் மசானத்தை வள குரு சந்நியாசி என அழைத்து அவரையே அங்கு பூசாரியாக இருக்குமாறு கூறினார்கள். அது முதல் மசானத்தின் சந்ததியினர் சுடலை மாறனை வழிபடத் துவங்கினார்கள். முதலில் அவர்கள் சிவனையே வணங்கி வந்தாலும் அதன் பின் சுடலையின் உருவத்தில் நான்கு கைகளை அமைத்து அதை வழிபட்டனர். அது மட்டும் அல்ல வனப் பேச்சி மற்றும் பிரும்ம ரிஷியையும் வணங்கினார்கள். அந்த சிலைக்குப் பின்னால் முண்ட சாமி எனும் தலை இல்லாதவர் உள்ளார். சுடலை மாடனின் ஆலயத்தில் இருந்து அரை கிலோ தொலைவில் வள குரு சன்யாசியின் ஆலயமும் உள்ளது. அதில் வள குரு சந்நியாசி லிங்க உருவில் உள்ளார். அவர் சமாதி அங்குதான் உள்ளது.
தாமரபரணி ஆற்றில் இருந்து எடுத்து வரப்படும் நீரினால் இரு முறை சுடலை மாlனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். அந்த ஆலயத்தில் தரப்படும் பிரசாதம் சுடுகாட்டில் இருந்து கொண்டு வரப்படும் மண்ணாகும் . அது அனைவரது குறைகளையும் நீக்குவதாக நம்புகிறார்கள் .
பங்குனி மாதத்தில் சுடலை மாடன் ஆலயத்தில் பெரிய விழா நடைபெறும். அப்போது அகு சந்நியாசி ஆலயத்தில் இருந்து எடுத்து வரப்படும் ஆடையை போடுகிறார்கள். வhy குரு சந்நியாசி சுடலை மhlனை அங்கு தினமும் பூஜை செய்வதாக நம்புகிறார்கள். அந்த விழாவின்போது சாமியாடி அருகில் உள்ள ஸ்மாசானத்துக்குச் சென்று பூமியைத் தோண்டி ஏதாவது பிணம் கிடைக்குமா எனப் பார்ப்பார். கிடைக்கவில்லை என்றால் வெறும் கையுடன் திரும்புவார். அந்த ஆலயத்தில் பலியாக தரப்படும் Mடுகளின் ரத்தத்தை சாமியாடி குடிப்பார். முட்டை, இறைச்சி கலந்த இருபத்தி ஒரு பிடி சாதம் சமைக்கப்பட்டு சுடலை மாறனுக்கு படைக்கப் படும். அதைத் தவிர சிகரெட் சாராயம் போன்றவற்றையும் சுடலை மாடனுக்கு தருகிறார்கள்.

M.PARANI DASS
SRI SUDALAIMADASAMY KOVIL,
SEEVALAPPERI
TIRUNELVELI - 627351
TAMILNADU
 —

பரணி தாஸ்


ஸ்ரீ புதியசாமி


ஸ்ரீ முண்டசாமி


seevalaperi sudalai madan